மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்தில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரு கைதிகளில் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் , மற்றொரு கைதியும் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (01) இரவு இடம்பெற்ற இவ் விபத்தில் 12 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது காயமடைந்தவர்களில் 7 பேர் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 3 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.