மார்ச் மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, இவ்வண்டில் 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்தோடு, ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகலிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.