NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாற்றுத்தினாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நிபந்தனைகளை குறிப்பிடும் சுற்றறிக்கையை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க வெளியிட்டுள்ளார்.

விண்ணப்பதாரரின் இயலாமை தொடர்பான மருத்துவப் பரிந்துரை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், விண்ணப்பதாரரை தொழில்நுட்பக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழுவில் மோட்டார் போக்குவரத்துத் துறையின் உதவி மோட்டார் ஆணையர், சிரேஸ்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவக் கழகத்தின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இதனால், புதிய குழு பல்வேறு மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, சாரதி உரிமம் பெறுவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்கும்.

இந்தக் குழு ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் கூடுவதுடன் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் கூடுதலாக சாரதி உரிமத்திற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயல்பாட்டில் சிக்கல் இருந்தால், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் இந்த சுற்றறிக்கையில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திடம் முறையீடு செய்யலாம். இதுவரை சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 600,000 பேர் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Share:

Related Articles