மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலின் வரவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றதுடன், தபால் மூல வாக்குகளைக் குறிக்க முடியாத வாக்காளர்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.