சாயம்போன, விரிசல் கண்ட இரு முனைத் தொப்பியொன்றை ஒருவர், 686 மில்லியன் ரூபா கொடுத்து ஏலம் எடுத்துள்ளார்.
அந்தத் தொப்பியை அணிந்திருந்தவர் மாவீரன் நெப்போலியனின் தொப்பியே இவ்வாறு 21 இலட்சம் டொலர் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆட்சி செய்துகொண்டு ஐரோப்பாவில் பெரும் வெற்றிகளைப் பெற்ற காலத்தில் பேரரசன் நெப்போலியனாவார். நெப்போலியன் அணிந்திருந்த உடைமைகள் சிலவற்றில் இதுவும் ஒன்றாகும்.
கடந்த ஆண்டு இறந்துவிட்ட பிரான்ஸ் தொழிலதிபர் ஒருவரின் சேகரிப்பிலிருந்த இந்தத் தொப்பி உள்ளிட்ட நெப்போலியன் தொடர்பான சில அரும்பொருள்கள், பாரிஸில் நேற்று(19) ஏலம் விடப்பட்டுள்ளன. இந்த ஏலத்தில் நெப்போலியன் தொப்பி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.