NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாவீரர் தினத்தை சட்டப்பூர்வமற்ற ரீதியில் அனுட்டிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வடக்கு கிழக்கில் எதிர்வரும் நாட்களில் மாவீரர் தினத்தை சட்டப்பூர்வமற்ற ரீதியில் அனுட்டிப்பவர்கள் தொடர்பில் பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள மாவீரர் வைபவங்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.

Share:

Related Articles