பிரித்தானியாவில் மிகவும் உடல் எடை கூடிய நபராக கருதப்படும் 34 வயதான ஜேசன் ஹோல்டன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
317 கிலோ எடையுள்ள ஹோல்டன், உடல் உறுப்பு செயலிழப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை சர்ரேயில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தனது பிறந்த நாளுக்கு ஒரு வாரங்களே இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். ஹோல்டனின் இரு சிறுநீரகங்களும் செயழிந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
ஹால்டன் இளம் பருவத்தில் தனது தந்தையின் மரணத்தை எண்ணி துக்கத்தில் இருந்தபோது அதிகமாக சாப்பிட ஆரம்பித்ததாகவும், ஒரு நாளைக்கு 10,000 கலோரிகளை உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஹோல்டன், தனது வாழ்க்கையின் குறிப்பட்ட காலபகுதியை, படுக்கையில் கழித்துள்ளார். அவரால் நகர முடியவில்லை என்பதுடன் சுவாசக் கஷ்டங்களால் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், “பொதுவாக எனக்கு நேரம் முடிந்துவிட்டது என்று நம்புகிறேன்” என ஹோல்டன் கூறியிருந்தார்.
2020 ஆம் ஆண்டு கீழே விழுந்த ஹோல்டனை 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவால் மூன்றாவது மாடியில் இருந்து கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.