NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்கட்டணத் திருத்தம் நாளை முதல் பொது மக்களிடம் கருத்து கோரல்!

மின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 8 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் நாளை முதல் தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6 ஆவது தளம், இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், கொழும்பு 3 என்ற முகவரிக்கும்,

iகெழ;pரஉளட.பழஎ.டம என்ற மின்னஞ்சல் மூலம் தமது யோசனைகளை முன்வைக்க முடியும்.

அத்துடன், 076 42 710 30 என்ற வட்ஸ்அப் ஊடாகவும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்கலாம்.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles