மின்கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக விசேட பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இன்று நடத்தப்படவுள்ளது.
அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இங்கு மின்கட்டண அதிகரிப்பு அல்லது குறைப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு வழங்ப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட எவருக்கும் இதற்கான கருத்துக்களை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இம்மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.