NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சார கட்டணத்தை குறைக்கத் தீர்மானம்!

நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5 வீத மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது.

இந்த வருடத்தின் இரண்டாவது மின்சார கட்டண திருத்தத்திற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆய்வு செய்த பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற பொதுக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தனது முடிவை பின்வருமாறு அறிவித்துள்ளது.

இதன்படி, வீடு, மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் என அனைத்து நுகர்வோர் பிரிவினரின் மின் கட்டணம் நாளை முதல் குறைக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் மூலம் மொத்த மின் கட்டணத்தை 10 வீதமாகக் குறைப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் ஆணைக்குழு மொத்தக் கட்டணங்களை 22.5 வீதமாகக் குறைத்துள்ளது.

புதிய கட்டண திருத்தத்துடன், இலங்கை மின்சார சபைக்கு ஏழு நிபந்தனைகளை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு விதித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட கட்டண விபரங்கள்:

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles