NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சார வேலியில் சிக்கி கொம்பன் யானை உயிரிழப்பு..!

புத்தளம் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குற்பட்ட கொஹம்பகஸ்வெவ பகுதியில் இன்று(29) காலை மின்சார வேலியில் சிக்குண்ட நிலையில் கொம்பன் யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானை, தனியார் ஒருவரின் காணியிலே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று யானை வேலியில் பொருத்தியமையினாலே குறித்த கொம்பன் யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த கொம்பன் யானை சுமார் 8 அடி உயரமுடையது எனவும் 30 வயது மதிக்கத்தக்கதாகவும் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்போது வீட்டின் உரிமையாளரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைது செய்து ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த யானைக்கு நிக்காவெரெட்டிய மிருக வைத்தியர் டொக்டர் இசுருவினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles