NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்னுற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

எந்தவித தடங்கலும் இன்றி மின்னுற்பத்தி மற்றும் எரிபொருளை விநியோகிப்பதற்கு தேவையான கனிய எண்ணெய் மற்றும் நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி வரை, ஒரு இலட்சத்து 23,888 மெட்ரிக் டன் டீசல் கையிருப்பில் இருந்தாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

13,627 மெட்ரிக் டன் லீற்றர் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.

இதுதவிர 90,972 மெட்ரிக் டன் ஒக்டேன் 92 ரக பெற்றோலும், 18,729 மெட்ரிக் டன் ஒக்டேன் 95 ரக பெற்றோலும் கையிருப்பில் இருந்ததாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக செயற்பட்ட கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share:

Related Articles