NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையை மின்சார சபை இன்று (22) தமக்குச் சமர்ப்பிக்குமாயின், இந்த வருட இறுதிக்குள் மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இந்த வருடம் அறிவிக்க முடியாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக 4 அல்லது 5 வாரங்கள் செலவிடப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான புதிய முன்மொழிவுகளை இந்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.

Share:

Related Articles