NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின் கட்டணத் திருத்த முன்மொழிவுகளை முன்வைக்க இலங்கை மின்சார சபைக்குப் 2 வாரகால அவகாசம்..!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத் திருத்த முன்மொழிவுகளை முன்வைக்க இலங்கை மின்சார சபைக்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 2 வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்கட்டணத் திருத்த முன்மொழிவுகளை வழங்கத் தவறினால் இலங்கை மின்சார சபையின் இலாபத்திலிருந்து நுகர்வோருக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

குறித்த திருத்த யோசனைத் தயாரிப்புக்காக இலங்கை மின்சார சபை இரண்டு சந்தர்ப்பங்களில் கால அவகாசத்தைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles