NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 பேர் பலி..!

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 1,000 ஆக உயர்வடைந்துள்ளது.

மியான்மரில் நேற்று ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 704 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கையும், காயங்களின் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என மியான்மர் இராணுவம் தலைமையிலான அரசின் மூத்த ஜெனரல் மின் ஆங் லாயிங் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மண்டாலே, சகாயிங், மாக்வே, வடகிழக்கு ஷான் மற்றும் பகோ பகுதிகளில் அவசரகால நிலையை அரசு பிறப்பித்து உள்ளதுடன் மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுடன் ரத்த நன்கொடைக்கான தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. நிவாரண பணிகளுக்கு ஐ.நா. அமைப்பு 50 லட்சம் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles