NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மிளகாய் பொடி தூவி மூதாட்டி பாலியல் துஷ்பிரயோகம் – வாலிபர் கைது!

70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வீட்டில் கொள்ளையடிக்கவந்த சந்தேக நபர் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதோடு வீட்டிலிருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் மூதாட்டியின் அலைபேசியையும் எடுத்துச்சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் காயங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கனகாகுன்னு பகுதியை சேர்ந்த தனேஷ் (வயது 29) என்ற இளைஞரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share:

Related Articles