NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

”மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” ஆக தெரிவான மலையகப் பெண் !

கனடாவில் இடம்பெற்ற 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.

கனடா நாட்டில் இயங்கும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் 2023ம் ஆண்டிற்கான தமிழ் அழகிகள் போட்டி கனடா டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காபுரோ மகாநாட்டு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சசிகலா நரேந்திரா ஏற்பாட்டில் மிக விமர்சையாக நடைபெற்றது.

குறித்த தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார்.

Share:

Related Articles