NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்ன?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகிதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழலில் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பதவி விலகக்கூடும் எனவும் அரசியல் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில், அவர் பதவி விலகினாலோ அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதவி விலக்கப்பட்டாலோ புதிய சுகாதார அமைச்சராக ராஜித நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles