NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் வரியை அதிகரித்த சீனா..!

அமெரிக்கா சீனாவிற்கு எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனாவும் இன்று பதிலளித்துள்ளது. 

அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரிகள் இன்று 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84% வரி விதித்திருந்தது. 

நேற்று சீனாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளை தெளிவுபடுத்திய வெள்ளை மாளிகை, சீன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி 145% என குறிப்பிட்டிருந்தது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா இன்று இந்த புதிய வரி விகிதத்தை அறிவித்துள்ளது.

Share:

Related Articles