முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்த நடவடிக்கையின் போதுஇ ஒரு சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபரினூடாக திருடப்பட்ட 9 முச்சக்கர வண்டிகளை மீட்டெடுக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் நேற்றைய திகம் சீதுவ, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இடங்களில் திருடப்பட்ட முச்சக்கர வண்டிகளை வைத்திருந்த மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சீதுவ, ஒருகொடவத்தை, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களைச் சேர்ந்த 31 முதல் 54 வயதிற்குட்பட்ட சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோட்டை, கிரிபத்கொட, வத்தளை, பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் இந்தக் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கோட்டை பெலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.