இலங்கை வரலாற்றில் முதன்மறையாக முட்டைகளுக்கு இன்று முதல் 18 சதவீத VAT வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இருப்பினும் VAT வரி நடைமுறைப்படுத்தப்பட்டாலும் முட்டை விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு முட்டையின் மீது விதிக்கப்பட்டிருக்கும் vat வரியின் மூலம் முட்டைத் தொழிலில் சரிவு ஏற்டபடும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை 25 முதல் 30 ரூபாய் வரை காணப்படுகின்றது.
இதனால் ஒரு முட்டை உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சில முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.