NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதல் தானியங்கி மருந்து விநியோக இயந்திரம் சவூதியில் அறிமுகம் !

மருந்துகளை விநியோகிக்க உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை வெற்றிகரமாக சவூதி அரேபியா அமைத்துள்ளது.

மருந்துகளை விநியோகிக்கும் உலகின் முதல் தானியங்கி இயந்திரத்தை சவூதி அரேபியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மன்னர் சல்மான் இராணுவ மருத்துவமனை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் வெற்றிகரமாக அமைத்துள்ளது.

நோயாளிகள் மருத்துவமனையை செல்ல வேண்டிய அவசியமின்றி தானியங்கி முறையில் மருந்துகளை வழங்குகிறது.

24 மணிநேர சேவையை வழங்கும் இந்த இயந்திரம் 102 – 700 மருந்து வகைகளை சேமிக்கும் திறன் கொண்டது.

பயனாளிகளுக்கு குறிப்பிட்ட மருந்துகளை தினசரி, மாதாந்தம் அல்லது வருடாந்த அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான தகவல்களையும் இவ்வியந்திரம் வழங்குகிறது.

நோயாளிகள் மருந்தகங்களில் மருந்துகளைப் பெறுவதற்கான காத்திருப்பு நேரத்தை குறைகிறது.

Share:

Related Articles