இந்தியாவின் பீகார், நவாடா மாவட்டத்திலுள்ள ரயில்வே ஊழியர் ஒருவரை பாம்பு கடித்துள்ளது. அந்த ஊழியர் தன்னைக் கடித்த பாம்பை திரும்பக் கடித்ததில் பாம்பு இறந்துள்ளது.
நவாடா மாவட்டம் ராஜௌளி வனப்பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் சந்தோஷ் லோஹர் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் இரவு உணவை உண்டுவிட்டு, உறங்கிக்கொண்டிருந்த சந்தோஷை அந்தப் பகுதியிலுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது.பாம்பு கடித்தவுடன் அந்த பாம்பை பிடித்து இரண்டு முறை கடித்துள்ளார் சந்தோஷ்.பாம்பு கடிபட்ட சந்தோஷ் உடனடியாக அவரது நண்பரினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சோதித்த மருத்துவர்கள் சந்தோஷ் நலமுடன் இருப்பதாகக் கூறினர்.
ஒரு விஷமுள்ள பாம்பு கடித்தால் அதை திருப்பி கடிப்பதன் மூலம் அந்த விஷம் பாம்பிடமே திரும்பிவிடும் என்பது கிராமப்புறத்தில் ஒரு நம்பிக்கையாக உள்ளது.எது எவ்வாறெனினும் குறித்த நபர் வேகம் மற்றும் விவேகத்துடன் செயல்பட்டு உயிர் பிழைத்துக்கொண்டார்.