NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..!

வயோதிபர்களை இளைஞர்களாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் பல வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் முதுமை அடைவதை தடுக்க எந்த மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. எனினும் அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் ஆய்வில், பன்றி இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை கொண்டு E5 எனப்படும் வயது எதிர்ப்பு சிகிச்சையை எலிகளுக்கு பரிசோதனை செய்து பார்த்துள்ளனர்.

எலிகளின் வயதை குறைக்கும் இந்த சோதனை 70 சதவீதம் வெற்றி அடைந்துள்ளதாகவும், மனிதர்கள் மீது சோதித்தால் 80 சதவீதம் வரை வெற்றி பெறும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனை வெற்றி பெற்றால் 90 வயது முதியவரையும் 26 வயது இளைஞராக மாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles