முன்னால் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
அதன்படி மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரையும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்
குறித்த வழக்குடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாக உள்ள பிரசன்ன ரணவீர உட்பட மூன்று பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஏப்ரல் 9 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்க நிலத்தை போலி பத்திரிகைகளைப் பயன்படுத்தி விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னால் அமைச்சர் மோர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று பேர் கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.