முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை வழங்கவில்லை அரசாங்க தகவல் வெளியாகியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மறைந்த சு. சம்பந்தன் மற்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆகியோரின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம் இதுவரை கையளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான, மனுஷ நாணயக்கார, ஜனக வக்கம்புர, காமினி லொகுகே,; வு.P.ஹேரத், அரவிந்த குமார், மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா, தேனுக விதானகமகே, ரமேஷ் பத்திரன, திலும் அமுனுகம, அருந்திக பெர்னாண்டோ, ஷாந்த பண்டார மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியில் இடம்பெற்றுள்ளது.