NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு திகதியிடப்பட்டது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் எதிர்வரும் ஜூலை மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று (07) இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்தது. இதனை அடுத்தே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Share:

Related Articles