NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் சுகாதார அமைச்சர் பி.எம்.பி. சிரில் விபத்தில் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் பி.எம்.பி சிரில் உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்தூக்கியின் உதவியுடன் மூன்றாவது மாடியில் கட்டுமானப்பணிகளை பார்வையிடுவதற்காக தனது சாரதியுடன் மேல் தளத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, மின்தூக்கி உடைந்து கீழே விழுந்ததில் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணத்தின் போது, அவருக்கு 89 வயது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles