முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார்.
தற்போது மன்மோகன் சிங்கின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்
அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அத்தோடு, நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று காலை 11 மணியளவில் மத்திய மந்திரிசபை கூடியதோடு, மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9.30க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை காலை 8.30க்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.