(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
முன்பள்ளி முதல் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றமன்றத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் பாலியல் தொடர்பான அறிவை வழங்குவதற்காக 14 புத்தகங்கள் தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களையும் ஒரே நேரத்தில் அச்சிடுவது சிரமமாக இருப்பதால், கூடுதல் வாசிப்பு புத்தகங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
				
															






