முல்லைத்தீவு செம்மலை கிழக்கு நாயாறு மீனவர்கள் நேற்று மாலை கொக்கிளாய் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றையும் நடத்தினர்.
நாயாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்துமாறு கூறிய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று முன் தினம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை தடுப்பதற்கு கிராம மக்கள் ஒன்று திரண்டு நடவடிக்கையை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட மீனவர் தரப்பினரால் கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் ஐந்து கிராம மீனவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து நேற்று பொலிஸ் நிலையாம் சென்ற குறித்த நபர்களும் ஏனைய கிராம மக்களும் பொலீஸ் பொறுப்பு அதிகாரியுடன் கலந்துரையாடல் ஈடுபட்டதுடன் வெளியே கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றிணையும் முன்னெடுத்தனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகளிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.