NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சார்ஜன்டாக கடமை புரியுந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் அம்பாறையை சேர்ந்த 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் இறப்புக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles