NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மு.ஜனாதிபதி மைத்திரியின் சகோதரரின் வீட்டில் திருட்டுப்போன விலையுயர்ந்த மோதிரம் – மதிப்பு இவ்வளவா?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொலன்னறுவை உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரின் வீட்டின் அலுமாரியில் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரமும் பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

நீலக்கல் பதிக்கப்பட்ட 6 பவுண் மோதிரம், 5,000 அமெரிக்க டொலர்களும் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் திருடப்பட்டுள்ளதாக, வீட்டின் உரிமையாளரான வர்த்தகர் பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெலியத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஊழியர் ஒருவர் தெடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் காணாமல் போயுள்ளதனால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles