நாடளாவிய ரீதியில் உள்ள உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் போதிய வசதிகள் வழங்கப்படாமையால் பல உப தபால் அலுவலகங்கள் மூடப்படும் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.
நகர்ப்புறங்களில் அமைந்துள்ள உப தபால் நிலைய கட்டடங்களுக்கு மாத வாடகையாக 1,500 ரூபாயும், கிராமப்புறங்களில் 750 ரூபாயும் அரசால் வழங்கப்படுகின்றது. ஆனால் அந்தளவு சொற்பத் தொகைக்கு வாடகை கட்டடம் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீர், மின்சாரக் கட்டணங்களை அதிகாரிகள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையால் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 3,410 உப தபால் நிலையங்கள் உள்ள நிலையில், அவற்றில் 3,351 உப தபால் நிலையங்கள் தற்போது இயங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.