தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் புதிய சட்டதிட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தனியார் மருந்தகங்கள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் ஐயாயிரத்து நூறு தனியார் மருந்தகங்கள் செயற்படுகின்றன. இதுவரை காலமும் தனியார் மருந்தகம் ஒன்றை பதிவு செய்வதற்கு மட்டுமே தகுதிவாய்ந்த மருந்தாளர் ஒருவரின் பதிவு சான்றிதழ் தேவைப்பட்டிருந்தது.
இந்நிலையில்இ தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளது.
அதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன என்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.