NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூடப்பட்டதா கார்ட்டூன் நெட்வொர்க்..?

வோர்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமான அமெரிக்க கேபள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க். அனைவரும் சிறுவயதில் டோம் எண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜோனி பிரேவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம். இதை அனைத்தும் தயாரித்து அனைவரும் மகிழ்ச்சிக்கு வழிவகையாக இருந்தது கார்ட்டூன் நென்வொர்க் சேனல் ஆகும்.

எவ்வாறாயினும் நாளடைவில் இதற்கு போட்டியாக பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தன. ஆனாலும் கார்ட்டூன் நெட்வொர்க்கின் உச்சம் குறையவில்லை. 2021 ஆம் ஆண்டு கோவிட் வந்த போது பல நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் நடந்தது. ஆனால் கோவிட் காலத்தில் எந்த ஒரு நட்டமும் இல்லாமல் இயங்கியது இந்த அனிமேஷன் துறை மட்டுமே ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளிகளுக்கு பலியாகும் விதமாக பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அதன்படி அடுத்த சில ஆண்டுகளில் பல பிரபல அனிமேஷன் ஸ்டூடியோக்களில் இருந்து பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பல டிசைனர்ஸ் ஒன்றிணைந்து ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் உங்களுக்கு பிடித்தமான கார்ட்டுன் நெட்வொர்க் சேனலின் பிடித்த ஷோவின் கிலிப்பை #ripcartoonnetwork என்று பதிவிடமாறு கூறியிருந்தனர்.

இதனால் இந்த ஹேஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி , இன்று முழுவதும் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் மூடப்பட்டது என தவறான கண்ணோட்டத்தில் உள்ளனர்.

Share:

Related Articles