NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெக்சிகோ நாட்டில் வாகன விபத்தில் சிக்கி 16 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (14) வேன் – லோரி விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது.

விபத்தில் சிக்கிய வேனில் குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், வேன் தீப்பிடித்து எரிந்தததால் 26 பேர் வேனுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles