NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெதமஹனுவர பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழப்பு..!

கண்டி – மெதமஹனுவர, வத்துலியத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (20) அதிகாலையில் பெய்த கடும் மழையுடன் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உறங்கிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன், மண் மற்றும் வீட்டின் சுவர்களுக்கு இடையில் சிக்கிய நிலையில், அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வத்துலியத்த பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles