மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் நிலுவை வரித் தொகையில் 50 சதவீதத்தை செலுத்துமாயின், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை மாதாந்த அடிப்படையில் வழங்க முடியுமென மதுவரி திணைக்களம் அந்த நிறுவனத்திடம் யோசனை முன்வைத்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய வரியில் 5 .7 பில்லியன் ரூபாய் நிலுவை காணப்படுவதனால் இந்த நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தைக் கடந்த 5ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.