NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மெய்வல்லுநர் போட்டிகளில் முல்லைத்தீவு விதுஷன் – மாத்தளை துதிதர்ஷிதன் தங்கம் வென்று சாதனை!

தியகம, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் ஆரம்ப நாளான நேற்று முன்தினம் (13) நடைபெற்ற போட்டிகளில் முல்லைத்தீவு மாணவன் ஜெயகாந்தன் விதுஷன், மாத்தளை மாணவன் எஸ். துதிதர்ஷிதன் ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து வரலாறு படைத்தனர்.

அத்துடன் முதலாம் நாளன்று 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் ஒரு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டதுடன் இரண்டு முந்தைய சாதனைகள் சமப்படுத்தப்பட்டது.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய முத்தையன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த விதுசன் அப் போட்டியை 9:02.10 நிமிடங்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

இந் நிகழ்ச்சியில் முல்லைதீவு மாவட்ட பாடசாலை மாணவர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும்.

Share:

Related Articles