(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை விமானிகள் சங்கத்தின் தகவல்படி, முழுத்திறனுடன் விமானங்களை இயக்க குறைந்தபட்சம் 330 விமானிகள் தேவை. ஆனால் அவர்களில் 70 பேர் இராஜினாமா செய்துள்ளதாகவும், ஏனையவர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகமே விமானிகளை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.