NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மே 9 விவகாரம் – 60 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 9 ஆம் திகதி அவரது ஆதரவாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது.

இராணுவ நிலைகள் மற்றும் இராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இது தொடர்பான வழக்குகளை விசாரித்த இராணுவ நீதிமன்றம், உயர் நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்குகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரம் 25 பேருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 60 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக இராணுவம் இன்று அறிவித்துள்ளது.

மேலும் தண்டனை பெற்றவர்களில் இம்ரான் கானின் உறவினர் ஹசன் கான் நியாசியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லாகூர் படைப்பிரிவு தளபதியின் ஜின்னா இல்லம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கிலும்; அவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மே 9 வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்கீழ், அனைத்து குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை உள்ளது எனவு; இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டமை தொடர்பான 100 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை இராணுவ சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக இராணுவ அதிகாரிகளிடம் அரசாங்கம் கடந்த ஆண்டு ஒப்படைத்தது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles