ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், கட்சியின் ஒழுக்காற்று சபை உறுப்பினர்களும் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.