NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மொட்டு மீண்டும் மலரும் – நாமல் சூளுரை!

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக  நாட்டில் பல சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சொத்துக்களையும் வளங்களையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாட்டை  நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இதனை எம்மால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் எதிர்ப்போம்.

இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. இலங்கையின் வளங்கள் எதிர்காலத்துக்காக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை பொதுஜன பெரமுன ஒரு வீழ்ச்சியடைந்த கட்சி என பலர் பொய்யான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.  

எமது கட்சியை தோல்வியடைந்த கட்சியாக வெளிக்காட்ட பல சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது எமது கட்சி உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். எமது கட்சி உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 

எனினும்,  ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய எமக்கு அதிகாரம் இருந்தது எனவும் தெரிவித்தார்.

Share:

Related Articles