NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தான் குற்றவாளி அல்ல என டயானா கமகே நீதிமன்றில் தெரிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றவாளி அல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் அறிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தமக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 7 குற்றப்பத்திரிகைகளை வாசித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இந்த விசாரணை ஒக்டோபர் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles