(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மொனராகலை மாவட்டத்தில் சிறு அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (21) காலை பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் கூறியுள்ளது.
அதன்படி இன்று காலை 09 மணி 06 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 2.6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.