NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மொரட்டுவ கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு..!

மொரட்டுவ – முறவத்த பிரதேச கடற்கரையில் நிர்வாணமாகக் காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று இன்று (7) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்மலானை ராஜா மாவத்தை வீதியில் வசிக்கும் எஸ். செல்லவராஜ் என்ற 63 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (6) பிற்பகல் இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அண்மித்த கடற்கரையில் நீராடச் சென்ற வேளையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஹால் பான்சிஸின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share:

Related Articles