NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோடியின் வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.


அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மேலும், ஏப்ரல் 5 ஆம் திகதி, கொழும்பின் காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் பத்தரமுல்லை அபேகம வளாக வீதிகள் மூடப்படவுள்ளது.


இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்திற்கு அனைத்து சாரதிகளும் பொதுமக்களும் ஆதரவளிக்குமாறு இலங்கை பொலிஸ் கோரியுள்ளது .

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles