இந்தியாவின் டெல்லியின் சூழல், காற்று மாசு காரணமாக நாளுக்குநாள் கடுமையாகி வருகின்றது.
இதனால் இன்று டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 293 ஆக பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், யமுனை நதியில் பனிப்படலம் போன்று இரசாயனங்கள் நுரைகளாக உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீரில் உருவாகியுள்ள நுரையில் அமோனியாவின் அளவு அதிகமாக உள்ளதால் மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தோல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.