மக்காவில் 118 டிகிரி பேரன்ஹீட் வெப்பம் நிவுகின்ற நிலையில் ஹஜ் யாத்திரைக்குச் சென்ற 6 பேர் வெப்பத் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாண்டு வருடாந்த கூட்டத்தின் போது வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை (118 டிகிரி பாரன்ஹீட்) எட்டக்கூடும் என சவுதி அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஆறு பேரும் ஜோர்டானிய குடிமக்கள் என, ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை (15) கூறியது, சடலங்களை புதைக்கும் நடைமுறைகள், அவர்களின் உடல்களை ஜோர்டானுக்கு மாற்றுவது குறித்து ஜெட்டாவில் உள்ள சவுதி அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்கின்றனர் என்று சவுதி பொது ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்,இலங்கையைச் சேர்ந்த ஹஜ் யாத்திரிகளுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.